உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / குச்சனுாரில் புறக்காவல் நிலைய கட்டடம் பயன்பாட்டிற்கு வருமா

குச்சனுாரில் புறக்காவல் நிலைய கட்டடம் பயன்பாட்டிற்கு வருமா

சின்னமனூர்: குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயில் வளாகத்தில் கட்டப்பட்ட போலீஸ் புறக்காவல் நிலைய கட்டடம் பூட்டி வைக்கப்பட்டுள்ளது.குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயில் புராதன மானதும், பிரசித்தி பெற்றதுமாகும். தமிழகத்தில் சனீஸ்வர பகவானுக்கென தனி கோயில் இங்கு மட்டுமே உள்ளது. தினமும் திரளாக பக்தர்கள் தமிழகம் முழுவதும் இருந்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் பெருந்திருவிழா நடைபெறும். இந்த திருவிழாவில் மூன்றாவது வாரம் சனிக்கிழமை நடைபெறும் திருவிழாவில் பங்கேற்க லட்சக்கணக்கில பக்தர்கள் கூடுவார்கள்.நீதித் துறை , - போலீஸ், வருவாய் துறை உள்ளிட்ட அரசு துறைகளின் உயர்அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் என முக்கிய பிரமுகர்கள் தினமும் வருகின்றனர். எனவே குச்சனூரில் - போலீஸ் புறக்காவல் நிலையம் கோயில் வளாகத்தில் கட்டடம் கட்டப்பட்டது. ஆனால் கட்டடம் பணி முடிந்தும் செயல்பாட்டிற்கு வராமல் பூட்டியே வைக்கப்பட்டுள்ளது. கட்டப்பட்ட புதிய கட்டடத்தில் போலீஸ் புறக்காவல் நிலையம் செயல்பட எஸ்.பி. சிவபிரசாத் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை