உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / திருடிய நகையை விற்க முயன்று போலீசில் சிக்கிய பெண்

திருடிய நகையை விற்க முயன்று போலீசில் சிக்கிய பெண்

மூணாறு: கேரளா, திருச்சூர் மாவட்டம் மாம்ப்ரா தேசம், கல்லூர்தெக்குமுறி கிராமத்தைச் சேர்ந்தவர் சுதா 24. இவர், மூணாறில் சர்ச்சில் பாலம் அருகில் உள்ள நகை கடையில் நேற்று நகை எடுப்பதாக கூறி 10 கிராம் தங்க செயினுடன் மாயமானார். கடை உரிமையாளர் நகைகளை சரிபார்த்தபோது செயின் காணாமல் போனது தெரியவந்தது. கடை உரிமையாளர் போலீசில் புகார் அளித்தார். கண்காணிப்பு கேமராவில் பதிவான சுதாவின் போட்டோவை ' வாட்ஸ் அப்' உள்பட சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டது.இதனிடையே மூணாறில் இருந்து ஆட்டோவில் அடிமாலி சென்ற சுதா, அங்கு நகை கடையில் செயினை விற்க முயன்றார். சந்தேகம் அடைந்த ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.போலீசார் அடிமாலி நகை கடைக்கு சென்று சுதாவிடம் இருந்த நகையை கைப்பற்றினர். சுதாவை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை