உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மலைப்பாதையில் வேன் கவிழ்ந்து கல்லுாரி மாணவர்கள் 10 பேர் காயம்

மலைப்பாதையில் வேன் கவிழ்ந்து கல்லுாரி மாணவர்கள் 10 பேர் காயம்

போடி; தஞ்சாவூர் சாஸ்திரா பல்கலை பிஎச்.டி., மாணவர்கள் வீரபாண்டி, துளசி, கோபிநாத், பாலன், நிவேதிதா, கிருஷ்ணவேணி, ஜெயபிரகாஷ், அருண்குமார், ராம், விமல் உட்பட 21 பேர் நேற்று முன்தினம் வேனில் கேரளா, மூணாறு மறையூர் பகுதிக்கு சுற்றுலா சென்று விட்டு, நேற்று அதிகாலை போடிமெட்டு மலைப் பாதையில் வந்தனர். வேகமாக வந்த வேன் தேனி மாவட்டம், போடிமெட்டு மூன்றாவது வளைவில் திரும்பும் போது அங்கிருந்த தடுப்புச்சுவர் மீது மோதி கவிழ்ந்தது. இதில் வீரபாண்டி , நிவேதிதா உட்பட 7 பேர் லேசான காயம் அடைந்தனர். பலத்த காயம் அடைந்த துளசி 25, கோபிநாத் 26, பாலன் 26 மூவரும் தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குரங்கணி போலீசார் டிரைவர் கிஷோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை