உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ரோட்டில் சென்ற வேன் தீ பற்றியது அதிர்ஷ்டவசமாக 10 பேர் தப்பினர்

ரோட்டில் சென்ற வேன் தீ பற்றியது அதிர்ஷ்டவசமாக 10 பேர் தப்பினர்

-பெரியகுளம்: பெரியகுளம் தேவதானப்பட்டி ரோடு எ.புதுப்பட்டி அருகே வேன் திடீரென தீ பற்றி எரிந்தது. டிரைவர் கீர்த்தி சமார்த்தியமாக செயல்பட்டதால் 10 பேர் உயிர் தப்பினர். கம்பத்திலிருந்து திருச்சி நோக்கி வேனை டிரைவர் கீர்த்தி 29, ஓட்டிச் சென்றார். இதில் கம்பத்தைச் சேர்ந்த பாலன் இவரது உறவினர்கள், நண்பர்கள் என 10 பேர் விசேஷத்திற்கு சென்று கொண்டிருந்தனர். பெரியகுளம் அருகே எ.புதுப்பட்டியை கடந்து நேற்று மாலை வேன் தேவதானப்பட்டி ரோட்டில் சென்றது. அப்போது வேன்இன்ஜினில் புகை வந்த சிறிது நேரத்தில் தீ மளமளவென எரிந்தது. டிரைவர் சமர்த்தியமாக செயல்பட்டுவேனை ஓரம் கட்டினார். வேனில் இருந்த 9 பேரும் தங்களது உடமைகளுடன் இறங்கி தப்பினர். இதனை தொடர்ந்து வேனில் 70 சதவீதம் எரிந்து சேதமானது. பெரியகுளம் தீயணைப்புத்துறை அலுவலர் மாரநாடு தலைமையில் வீரர்கள் ஆனந்த், குருமூர்த்தி, ராஜேஷ் ஆகியோர் தீயை 20 நிமிடம் போராடி அணைத்தனர். பெரியகுளம் வடகரை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி