லோக் அதாலத்தில் 10 ஆயிரம் வழக்குகளுக்கு தீர்வு
தேனி : மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் நேற்று நடந்த லோக்அதாலத்தில் ரூ.10.98 கோடி மதிப்பிலான 10,077 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.தேனி மாவட்ட நீதிமன்றத்தில் முதன்மை மாவட்ட நீதிபதி சொர்ணம் ஜெ.நடராஜன் மக்கள் நீதிமன்றத்தை துவக்கி வைத்தார். நிலுவையில் உள்ள வழக்குகள், வங்கிகளில் வாராக்கடன்களுக்கான வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சார்பு நீதிபதி கீதா, குடும்ப நல நீதிமன்ற நீதிபதி சரவணன், அமர்வு நீதிபதிகள் அனுராதா, கணேசன், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் சரவணக்குமார், நீதித்தறை நடுவர் ஜெயமணி பங்கேற்றனர்.பெரியகுளத்தில் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி சமீனா, சார்புநீதிபதி சந்திரசேகர், நீதித்துறை நடுவர் கமலநாதன் முன்னிலை வகித்தனர். உத்தம பாளையத்தில் சார்பு நீதிபதி சிவாஜிசெல்லையா, மாவட்ட உரிமையியல் நீதிபதி ராஜசேகர், நீதித்துறை நடுவர் ராமநாதன், ஆண்டிபட்டியில் மாவட்ட உரிமையியல் நீதிபதி கண்ணன், நீதித்துறை நடுவர் ரமேஷ், போடியில் சார்பு நீதிபதி சையது சுலைமான் உசேன், நீதித்துறை நடுவர் பழனிவேல்ராஜன் முன்னிலை வகித்தனர்.மாவட்டத்தில் நடந்த லோக்அதாலத்தில் 10,077 வழக்குகளுக்கு ரூ. 10.98 கோடி மதிப்பில் தீர்வு காணப்பட்டது.