பேரூராட்சி நியமன உறுப்பினர் பதவிக்கு 100 பேர் விண்ணப்பம்
தேனி: மாவட்டத்தில் பேரூராட்சிகளில் நியமன உறுப்பினர் பதவிக்கு 100 மாற்றுத்தினாளிகள் விண்ணப்பித்துள்ளனர். உள்ளாட்சிகளில் மாற்றுத்திறனாளிகள் பிரதிநிதித்துவம் பெறும் வகையில் நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்படுவார்கள் என கடந்த ஜூனில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி மாவட்டத்தில் உள்ள 22 பேரூராட்சிகளில் நியமன உறுப்பினர்களாக நியமிக்க கோரி 100 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் தகுதியானவர்களை தேர்வு செய்யும் பணி நடந்துவருகிறது. இதுபற்றி பேரூராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'கலெக்டர் தலைமையில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உள்ளிட்டோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தகுதியான நபர்களை தேர்வு செய்வார்கள். தேர்வாகும் நபர்கள் பேரூராட்சி கவுன்சில் கூட்டங்களில் பங்கேற்பார்கள். அவர்களுக்கு மதிப்பூதியம் வழங்கப்படும். என்றனர்.