உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / 10 ஆயிரம் ஊராட்சி செயலாளர்கள் செப்.27ல் தற்செயல் விடுப்பு போராட்டம்

10 ஆயிரம் ஊராட்சி செயலாளர்கள் செப்.27ல் தற்செயல் விடுப்பு போராட்டம்

ஆண்டிபட்டி:அரசின் ஓய்வூதியத் திட்டத்தில் இணைப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் 10 ஆயிரம் ஊராட்சி செயலாளர்கள் செப்., 27ல் ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து சென்னை ஊராட்சிகள் இயக்குனரகத்தில் முறையீடு இயக்கம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.இதுகுறித்து தேனியில் ஊராட்சி செயலாளர்கள் சங்க மாவட்ட தலைவர் பாலமுருகன் கூறியதாவது: ஊராட்சி செயலாளர்களை தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இதுவரை இணைக்கவில்லை. சிறப்பு காலவரை ஊதியம் பெற்று வந்த பொழுது வழங்கப்பட்ட ஓய்வூதியத்தொகையான ரூ. 2000 மட்டுமே இன்று வரை வழங்கப்படுகிறது. ஊராட்சி செயலாளர்களை தமிழக அரசின் ஓய்வூதியத் திட்டத்தில் இணைக்க பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் அரசு கண்டுகொள்ளவில்லை.எனவே இக்கோரிக்கையை முன்வைத்து ஆக., 21 மாநில முழுவதும் ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து மாவட்ட அளவில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. அடுத்தகட்டமாக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், கூடுதல் தலைமை செயலாளர், இயக்குனருக்கு மாநிலம் முழுவதும் இருந்து 40 ஆயிரம் கடிதம் அனுப்பும் கவன ஈர்ப்பு போராட்டமும் நடந்தது. அடுத்த கட்டமாக செப்.,27ல் மாநிலம் முழுவதும் 10 ஆயிரம் ஊராட்சி செயலாளர்கள் ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து சென்னை பனகல் மாளிகை முன்பெருந்திரள் முறையீட்டு இயக்கம் நடத்த உள்ளோம். ஊராட்சி செயலாளர்களின் ஒரு நாள் தற்செயல் விடுப்பால் ஊராட்சிகளில் வரி வசூல், நிர்வாகப்பணி, திட்ட பணிகளில் பாதிப்பு ஏற்படும். ஊராட்சி செயலாளர்களின் இதுபோன்ற கோரிக்கைகளை பரிசீலிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை