மேலும் செய்திகள்
யானை இறப்பில் மர்மம்; வனத்துறை விசாரணை
08-Aug-2025
கம்பம்; மேகமலையில் நேற்று முன்தினம் இறந்து கிடந்த 11 மாத சிறுத்தை குட்டியை புலி வேட்டையாடி கொன்றிருக்கலாம் என வனத்துறையினர் கூறினர். மேகமலையில் மேல் மணலாறு பகுதியில் சிறுத்தை ஒன்று இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. வனத்துறையினர், கால்நடை மருத்துவர் குழு அங்கு சென்று பார்த்தது. அப்போது இறந்து கிடந்த சிறுத்தை குட்டி பிறந்து 11 மாதங்களே ஆனது தெரிந்தது. சிறுத்தை குட்டியை புலி கடித்திருக்கலாம் என வனத்துறையினர் கூறினர். காரணம் சிறுத்தையை சிறுத்தையே வேட்டையாடது. சிறுத்தையை, புலிகள் தான் வேட்டையாடும். மேலும் இறந்து கிடந்தது இருமாநில வன எல்லைப் பகுதியாகும். பெரியாறு புலிகள் காப்பகத்தை ஒட்டியிருப்பதால் புலி கடித்திருக்க அதிக வாய்ப்பிருப்பதாகவும், இறந்த சிறுத்தையின் உடல் பாகங்கள் பரிசோதனைக்கு எடுக்கப்பட்டது. பின் அதே இடத்தில் உடல் எரியூட்டப்பட்டது. சிறுத்தை குட்டி இறந்து கிடந்த வட்டப்பாறை என்ற இடத்தில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகம் இருப்பதாகவும், கரும் சிறுத்தை இருப்பதை கேமரா பதிவுகள் உறுதி செய்திருப்பதாகவும் வனத்துறையினர் கூறுகின்றனர்.
08-Aug-2025