10ம் வகுப்பு தமிழ் தேர்வில் 14,245 பேர் பங்கேற்பு மூச்சுத்திணறல் ஏற்பட்ட மாணவருக்கு முதலுதவி
தேனி: மாவட்டத்தில் நேற்று துவங்கிய 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் என மொத்தம் 14,245 பேர் தமிழ் தேர்வை எழுதினர்.மாவட்டத்தில் உள்ள 199 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் 7044 பேர், மாணவிகள் 7191 பேர் என மொத்தம் 14,235 பேரும், தனித்தேர்வர்கள் 557 பேர் என மொத்தம் 14,792 பேர் தேர்வு எழுத இருந்தனர். நேற்று பள்ளி மாணவர்கள் 6860 பேர், மாணவிகள் 7117 பேர் என, மொத்தம் 13,977 பேரும், தனித்தேர்வர்களில் 268 பேர் என மொத்தம் 14,245 பேர் தேர்வு எழுதினர். இதில் 193 பள்ளி மாணவ மாணவிகள், 22 தனித்தேர்வர்கள் என, ெமாத்தம் 215 பேர் ஆப்சென்ட்'ஆகினர். மாணவனுக்கு முதலுதவி
நேற்று காலை 10:00 முதல் மதியம் 1:15 மணி வரை தேர்வு நடந்தது. இதில் அல்லிநகரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவர் ரூபனுக்கு 9:50 மணிக்கு படபடப்பு காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக பள்ளி தமிழாசிரியர் செந்தில்குமார் ஆட்டோவில் ஆரம்பசுகாதார நிலையத்திற்கு மாணவர் ரூபனை அழைத்துச் சென்று முதலுதவி செய்து , 10:00 மணிக்கு தேர்வு அறையில் அனுமதிக்கப்பட்டு, தேர்வு எழுதினார்.