தேனியில் விதிமீறி இயக்கிய 20 ஆட்டோக்கள் பறிமுதல்
தேனி: தேனி நகர் போக்குவரத்து போலீசார், வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் இணைந்து நகரின் 3 இடங்களில்150 ஆட்டோக்களை ஆய்வு செய்தனர். இதில் விதிமீறிய 20 ஆட்டோக்கள் பறிமுதல் செய்தனர். இந்நகரின் பஸ் ஸ்டாண்ட் கம்பம் ரோடு, பெரியகுளம் ரோடு என்.ஆர்.டி., மெயின் ரோடு சந்திப்பு, மதுரை ரோடு தனியார் மருத்துவமனை அருகே உள்ள ரோடு உள்ளிட்ட மூன்று பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இதில் தேனி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சஜூக்குமார், எஸ்.ஐ.,கருப்பசாமி தலைமையிலான போலீசார், வட்டார போக்குவரத்துஆய்வாளர்கள் மணிவண்ணன், அழகேசன் ஆய்வில் ஈடுபட்டனர். மொத்தம் 150ஆட்டோக்கள் பரிசோதனையில் 20 ஆட்டோக்கள் விதிமீறி இயங்கியதால் அந்த ஆட்டோக்கள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.' என, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் தெரிவித்தார்.