உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சுருளியாறு மின் நிலையத்தில் 20 மெகாவாட் மின் உற்பத்தி

சுருளியாறு மின் நிலையத்தில் 20 மெகாவாட் மின் உற்பத்தி

கம்பம்,: தேனி மாவட்டம், மேகமலை பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்வதால் இங்குள்ள அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து சுருளியாறு மின் நிலையத்தில் 20 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. மேகமலை பகுதிகளில் ஹைவேவிஸ், மணலாறு, இரவங்கலாறு, வெண்ணியாறு, மகாராஜா மெட்டு உள்ளிட்ட பகுதிகளில் நீர்த் தேக்கங்களும் தேயிலை தோட்டங்களும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் உள்ளன. இங்குள்ள அணைகளில் சேகரமாகும் நீரை பயன்படுத்தி சுருளியாறு மின் நிலையத்தில் 35 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய முடியும். கடந்த சில வாரங்களாக பெய்து வரும் தொடர் மழையால் அணைகள் நிரம்பி வருகிறது. இதனால் சுருளியாறு மின் நிலையத்தில் 20 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெறுகிறது. தேவையான அளவு நீர் வரத்து இருந்தும் ஏன் முழு அளவில் மின் உற்பத்தி நடைபெறவில்லை என்று விசாரித்த போது, 'லோயர்கேம்ப் மின் நிலையத்தில் 168 மெகாவாட் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த மின்சாரமும், சுருளியாறு மின் நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரமும் தேனி மின் பாதையில் செல்வதால் அடிக்கடி டிரிப் ஆகிறது. கயத்தாறு மின்பாதையில் டவர் அமைக்கும் பணிகள் நடப்பதால், அந்த வழியில் லோயர்கேம்ப் மற்றும் சுருளியாறு மின்சாரத்தை கொண்டு செல்ல முடியவில்லை. எனவே சுருளியாறு மின் நிலையத்தில் முழு அளவில் உற்பத்தி செய்யாமல் 20 மெகாவாட் உற்பத்தி நடைபெறுகிறது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை