உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மேகமலையில் 2வது சோதனை சாவடி பணி: தோட்ட தொழிலாளர்கள் அதிருப்தி

மேகமலையில் 2வது சோதனை சாவடி பணி: தோட்ட தொழிலாளர்கள் அதிருப்தி

கம்பம் : மேகமலையில் ரூ.25 லட்சம் செலவில் சோதனை சாவடி கட்டுமான பணிகளை வனத்துறை துவக்கியுள்ளது. இதற்கு தொழிலாளர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.சின்னமனூரிலிருந்த 46 கி.மீ. தூரத்தில் மேகமலை, ஹைவேவிஸ், மணலாறு, வெண்ணியாறு, இரவங்கலாறு, மகாராஜாமெட்டு உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. மேகமலை பகுதிகள் 2020 ல் புலிகள் காப்பகமாக மாற்றி மத்திய அரசு உத்தரவிட்டது. அதன் பின் தேசிய புலிகள் பாதுகாப்பு முகமையின் சட்டதிட்டங்களின் படி வனத்துறை செயல்படுகிறது.மேகமலை பகுதிகளுக்கு மாலை 5:00 மணிக்கு மேல் அனுமதிக்க மறுத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதை நடைமுறைப்படுத்த தென் பழநி மலையடிவாரத்தில் வனத்துறை சோதனை சாவடி அமைத்து கண்காணிப்பு பணி நடக்கிறது. அதே போன்று மலைப்பகுதிகளிலிருந்தும் மாலை 5 மணிக்கு மேல் இறங்குவதற்கு தடை உள்ளது.ஆனால் சுற்றுலா பயணிகள் மாலை 5:00 மணிக்கு மேல், மேலிருந்து கிளம்பி இரவு தென்பழநி சோதனை சாவடிக்கு வந்து தகராறு செய்கின்றனர். இதை தவிர்க்க தென் பழநியில் உள்ளது போன்று மேகமலை அருகில் பூ மாரியம்மன் கோயில் அருகில் வனத்துறை ரூ.25 லட்சம் மதிப்பில் புதிய - சோதனை சாவடி அமைக்கும் பணி துவங்கி உள்ளது.இது பற்றி வனத்துறையினர் கூறுகையில், சுற்றுலா பயணிகள் மாலை 5 மணிக்கு மேல் கிழே வந்து தென் பழநி சோதனை சாவடியில் தகராறு செய்கின்றனர் அப் பிரச்னையை தவிர்க்க மேகமலையில் புதிதாக சோதனை சாவடி அமைக்கவும், இங்கு இரண்டு வனக் காப்பாளர் பணியிடங்கள் ஏற்படுத்த அரசு அனுமதியளித்துள்ளது. இந் நடைமுறைகள் அனைத்தும் ஐகோர்ட் உத்தரவுப்படி செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் ஹைவேவிஸ் மலைப்பகுதியிலிருந்து மாலை 5 மணிக்கு மேல் மேலிருந்து கீழ் இறங்குவது மேலேயே தடுக்கப்படும் என்றனர். வனத்துறையின் இந்த இரண்டாவது சோதனை சாவடி அமைப்பதற்கு தோட்ட தொழிலாளர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை