உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மருத்துவமனை ஊழியரிடம் தகராறு செய்த 3 பேர் கைது

மருத்துவமனை ஊழியரிடம் தகராறு செய்த 3 பேர் கைது

கம்பம்: கம்பம் அரசு மருத்துவமனை ஊழியர்களிடம் தகராறு செய்த 3 பேர்களை போலீசார் கைது செய்தனர்.கம்பம் ராமையாகவுடர் தெருவை சேர்ந்த சுரேந்திரன் 39, இவர் டிச. 28 ல் கம்பமெட்டு ரோட்டில் விபத்தில் உயிரிழந்தார். இவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அறையில் வைக்கப்பட்டிருந்தது. இறந்து போன சுரேந்திரனின் நண்பர்கள் ரித்தீஸ்வரன் , சின்னன், தமிழ்செல்வம் ஆகியோர் பிரேத பரிசோதனை அறை பணியில் இருந்த மருத்துவமனை ஊழியர்கள் ராஜாஜி யாசர் அராபத்திடம், தங்கள் நண்பரின் உடலை பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளனர். அதற்கு ஊழியர்கள் அனுமதி மறுத்தனர். இதனால் ஊழியர்களை அவதூறாக பேசி, அறையின் பூட்டை உடைக்க முயற்சி செய்துள்ளனர். இது தொடர்பாக மருத்துவமனை சார்பில் போலீசில் புகார் தரப்பட்டது. கம்பம் தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து, மூவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை