குட்டையில் மூழ்கி 3 வயது குழந்தை பலி
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே சித்தைய கவுண்டன்பட்டியை சேர்ந்தவர் யுவரஞ்சனி 25, இவரது குழந்தை வேணுபிரசாத் 3, தனது தாத்தாவுடன் தோட்டத்திற்கு சென்றுள்ளான். குழந்தையை விளையாட விட்டு தாத்தா ஆடுகளுக்கு இலைகளை பறித்துக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் அருகில் இருந்த தண்ணீர் குட்டையில் குழந்தை தவறி விழுந்து விட்டான். இதனை யாரும் கவனிக்கவில்லை. சிறிது நேரத்திற்கு பின் குழந்தையை காணாமல் தேடி பார்த்த போது தண்ணீர் குட்டையில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளான். குழந்தையை தூக்கி ஆண்டிபட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். தாய் யுவரஞ்சனி புகாரில் ஆண்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.