உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / காரில் 4.5 கிலோ கஞ்சா கடத்திய 4 பேர் கைது

காரில் 4.5 கிலோ கஞ்சா கடத்திய 4 பேர் கைது

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி பகுதியில் கஞ்சா புழக்கம் அதிகம் இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து எஸ்.ஐ., மணிகண்டன் மற்றும் போலீசார் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனர். ஆண்டிபட்டி வத்தலகுண்டு ரோட்டில் பி.தர்மத்துப்பட்டி ஆலமரம் பஸ் ஸ்டாப் அருகே சந்தேகத்திற்குரிய வகையில் வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் காக்கி நிற டேப் சுற்றப்பட்ட மூன்று பார்சலில் 4.5 கிலோ கஞ்சா இருந்துள்ளது. காரில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். காரில் இருந்தவர்கள் உசிலம்பட்டி அருகே வகுரணி குறுக்கம்பட்டியை சேர்ந்த பாலகிருஷ்ணன் 47, நதியா 38, தேவாரத்தைச் சேர்ந்த விஜயலட்சுமி 38, உசிலம்பட்டி அருகே நல்லுதேவன்பட்டியை சேர்ந்த ரவி 42, என்பது தெரிய வந்தது. நால்வரையும் கைது செய்த போலீசார் கஞ்சா, கார், அவர்களிடமிருந்த 4 மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ