உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சிறுமிக்கு திருமணம் முடித்த 4 பேர் கைது

சிறுமிக்கு திருமணம் முடித்த 4 பேர் கைது

கடமலைக்குண்டு: கடமலைக்குண்டு - மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விரிவாக்க அலுவலர் மலர்கொடி என்பவருக்கு அப்பகுதியில் நடந்த சிறுமியின் திருமணம் குறித்து தகவல் வந்தது. இதனை தொடர்ந்து கரட்டுப்பட்டியில் விசாரணை மேற்கொண்டார். அப்பகுதியில் 14 வயது சிறுமிக்கு ஜூலை 12 ல் திருமணம் முடிந்ததும் தற்போது அவர் 5 மாத கர்ப்பமாக இருப்பதும் உறுதி செய்யப்பட்டது. சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய விக்னேஷ் 30, அவரது உறவினர்கள் லட்சுமி 30, சேகர் 24, மயில் 48 ஆகியோரை மயிலாடும்பாறை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை