பெரியகுளத்தில் காட்டுப்பன்றியை வேட்டையாடிய 4 பேர் கைது
-தேவதானப்பட்டி : பெரியகுளம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் காட்டுப்பன்றியை வேட்டையாடிய நான்கு பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் தொண்டகத்தி பகுதியில் வனவிலங்குகளை இரவில் வேட்டையாடி வருவதாக தேவதானப்பட்டி வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.ரேஞ்சர் அன்பழகன் மற்றும் வனத்துறையினர் நேற்று முன்தினம் தொண்டகத்தி பகுதியில் சோதனை மேற்கொண்டனர். வனப்பகுதியில் மூன்று டூவீலரில் வந்த பெரியகுளம் வடகரையை சேர்ந்த ராஜா, சுரேஷ், பாண்டி, சோனைமுத்து ஆகியோரிடம் சோதனை செய்தனர்.இவர்களிடம் காட்டுப்பன்றி வேட்டையாடிய இறைச்சி, வேட்டையாட பயன்படுத்திய அரிவாள், கத்தி, சுருக்கு கம்பி வலை,மூன்று டூவீலர்கள் உள்ளிட்டவற்றை வனத்துறையினர் கைப்பற்றினர். நான்கு பேர் மீது வனவிலங்கு வேட்டையாடுதல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.