மேலும் செய்திகள்
கிராவல் மண் கடத்தல் லாரி பறிமுதல்
20-Sep-2025
பெரியகுளம்: பெரியகுளம் சப்-கலெக்டர் ரஜத்பீடன் நடத்திய சோதனையில் அனுமதியின்றி கிராவல்மண் திருடி வந்த 4 லாரிகள்களை பறிமுதல் செய்து நான்கு டிரைவர்களை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். போடி அருகே மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த லாரி டிரைவர்கள் விஸ்வநாதன் 34, பிரபுகண்ணன் 45, சிவமூர்த்தி 42, பெரியகுளம் கைலாசபட்டி மணிகண்டன் 51, ஆகியோர் தேவாரம் அருகே பொட்டிபுரம் குவாரியிலிருந்து 4 லாரிகளில் கிராவல் மண் ஏற்றிக்கொண்டு செம்பட்டி நோக்கி சென்றனர். தேனி ரோடு லட்சுமிபுரம் தனியார் பள்ளி அருகே சப்- கலெக்டர் ரஜத்பீடன், தாசில்தார் மருதுபாண்டி, தாமரைக்குளம் பிட்.1 வி.ஏ.ஓ., தங்கமுத்து ஆகியோருடன் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்பகுதியில் மண் ஏற்றி வந்த 4 லாரிகளை நிறுத்தி டிரிப் சீட்டுகளை சோதனையிட்டார். இதில் குவாரியிலிருந்து புறப்படும் நேரம், லாரிகள் சேரும் நேரம் முன்னுக்குப் பின் முரணாகவும், அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் வகையில் டிரிப் சீட்டினை முறைகேடாக பயன்படுத்தி கிராவல் மண் திருடி தெரியவந்தது. சோதனை செய்யும் போது ஐந்தாவதாக பதிவெண் தெரியாத லாரியை வேகமாக ஓட்டி சென்று ஒருவர் தப்பினார். தாமரைக்குளம் வி.ஏ.ஓ., அனீஸ் பாத்திமா புகாரில்,தென்கரை இன்ஸ்பெக்டர் முத்துபிரேம் சந்த், எஸ்.ஐ.,கர்ணன் 4 லாரி டிரவைர்களையும் கைது செய்து,4 லாரிகளை கைப்பற்றினர். லாரியுடன் தப்பி சென்ற போடி குவாரி உரிமையாளர் விண்ணரசை போலீசார் தேடி வருகின்றனர்.
20-Sep-2025