மேலும் செய்திகள்
கஞ்சா பதுக்கிய தம்பதி கைது
17-Nov-2024
தேவாரம்: தேவாரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் மூர்த்தி 53. மூணாண்டிபட்டியை சேர்ந்தவர் முத்துப்பேச்சி 63., இருவரும் டி.ரங்கநாதபுரம் அருகே பையுடன் நடந்து வந்துள்ளனர். சோதனை மேற்கொண்டதில் தலா 2.200 கிலோ கிராம் கொண்ட 2 பொட்டலங்கள் மொத்தம் 4கிலோ 400 கிராம் கஞ்சா இருந்தது தெரிந்தது. இருவரையும் பிடித்து விசாரித்ததில் தேவாரம் ஐய்யப்பன் கோயில் தெருவை சேர்ந்த முருகன் 52. தினேஷ் 38., இருவரும் பணம் கொடுத்து அனுப்பியதால் ஆந்திராவில் இருந்து விற்பனைக்காக கஞ்சா வாங்கி வந்தது தெரிந்தது. போலீசார் மூர்த்தி, முத்துப் பேச்சி இருவரையும் கைது செய்ததோடு, அவர்களிடம் இருந்து 4.400 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். முருகன், தினேஷ் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
17-Nov-2024