உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / இலக்கிய திறனறித்தேர்வு எழுதும் 4464 மாணவர்கள்

இலக்கிய திறனறித்தேர்வு எழுதும் 4464 மாணவர்கள்

தேனி: தமிழ்மொழி இலக்கியத்திறனறித்தேர்வு அக்.,19ல் நடக்கிறது. மாவட்டத்தில் இத்தேர்வினை 4464 மாணவர்கள் எழுத உள்ளனர்.பிளஸ் 1 மாணவர்களுக்கு தமிழ்மொழி இலக்கியத்திறனறித் தேர்வு நடத்தப்படுகிறது. இதில் 10ம் வகுப்பு தமிழ் பாடங்களில் இருந்து வினாக்கள் கேட்கப்படுகிறது. இத்தேர்வில் அரசு, உதவி பெறும், மெட்ரிக், சி.பி.எஸ்.இ., உள்ளிட்ட அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பிளஸ் 1 படிக்கும் மாணவர்கள் பங்கேற்றகலாம். தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு மாதம் ரூ. 1500 என ஆண்டிற்கு ரூ. 16,500 என இரு ஆண்டிற்கு ரூ.33 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. இந்த தேர்வு அக்.,19ல் மாவட்டத்தில் 15 மையங்களில் நடக்கிறது என கல்வித்துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை