உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / 468.2 மி.மீ., மழை பதிவு கனமழையில் 7 வீடுகள் சேதம்

468.2 மி.மீ., மழை பதிவு கனமழையில் 7 வீடுகள் சேதம்

தேனி: மாவட்டத்தில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. மொத்தம் 468.2 மி.மீ., மழை பதிவானது. மழையால் 7 வீடுகள் பகுதி சேதமடைந்தன.மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இடி, மின்னலுடன் கன மழை பெய்த்தது. தேனி, பெரியகுளம், போடி, ஆண்டிபட்டி பகுதிகளில் தீபாவளியை முன்னிட்டு பொருட்கள் வாங்க கடைகளுக்கு சென்றிருந்த பொதுமக்கள் மழையில் நனைந்தவாறு வீடு திரும்பினர்.மாவட்டத்தில் அதிகபட்சமாக ஆண்டிபட்டியில் 100.6 மி.மீ., வைகை அணையில் 58.4 மி.மீ., போடி 54 மி.மீ., பெரியகுளம் 50.4 மி.மீ., மஞ்சளாறு அணை 48 மி.மீ., அரண்மனைப்புதுார் 35.6 மி.மீ., வீரபாண்டி 28.2 மி.மீ., சோத்துப்பாறை 26.2 மி.மீ., உத்மபாளையம் 8.6 மி.மீ., கடலுார் 14.4 மி.மீ., சண்முகநதி அணை 16.2 மி.மீ., பெரியாறு அணை 14.2 மி.மீ., தேக்கடியில் 13.4 மி.மீ., என மொத்தம் 468.2 மி.மீ., மழை பதிவானது. இரவில் பெய்த கனமழையில் தேனி தாலுகா சீலையம்பட்டி சம்ஸ் காலனி பவுன்தாய், பெரியகுளம் தாலுகாவில் எண்டப்புளி மகாலட்சுமி, குள்ளப்புரம் முத்தையா, ஆண்டிபட்டி தாலுகா குன்னுார் பூவேந்திரன், ஆண்டிபட்டி மேக்கிழார்பட்டி ராஜா, ஏத்தக்கோயில் சிவசக்தி, உத்தமபாளையம் தாலுகா அனுமந்தம்பட்டி பட்டாளம்மன் கோவில் தெரு அன்புச்செல்வம் ஆகிய 7 பேர் வீடுகள் பகுதி சேதமடைந்தன. மற்ற பகுதிகளில் சேதம் தொடர்பான விபரங்களை வருவாய்துறையினர் சேகரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை