உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஆம்னி பஸ்சில் 6 பவுன் திருட்டு

ஆம்னி பஸ்சில் 6 பவுன் திருட்டு

பெரியகுளம்: பெரியகுளம் அருகே வடுகபட்டி ஆசிரியர் காலனியைச் சேர்ந்தவர் முத்துவேல் 74. இவர் ராணுவத்தில் எஸ்.ஐ.,யாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி பானுமதி 70. கோவையில் மகள் வீட்டிற்கு சென்றுவிட்டு, கோவையிலிருந்து கம்பம் செல்லும் தனியார் ஆம்னி பஸ்சில் பயணித்து பெரியகுளம் வடகரை பஸ்ஸ்டாண்ட் பிரிவில் இறங்கினர். பானுமதி கைப்பையை எடுக்காமல் இறங்கிவிட்டார். சிறிது நேரத்தில் கைப்பையை தவறவிட்டதை அறிந்து பஸ்சை பிடிப்பதற்கு முத்துவேல் முயற்சித்தார். பஸ் சென்று விட்டது. கைப்பையில் 3 பவுன் தங்க ஆரம் செயின், 3 பவுன் தங்க செயின் மற்றும் ரூ.8 ஆயிரம் பணம், மூன்று அலைபேசி இருந்தது. இதன் மதிப்பு ரூ.4 லட்சம். பஸ் நிர்வாகத்திடம் கேட்டபோது கைப்பை இல்லை என்றனர். புகாரில் நகை திருட்டு குறித்து பெரியகுளம் வடகரை எஸ்.ஐ.,விசாரணை செய்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ