உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஆசிரியர் காரை மறித்து  ரூ7.5 லட்சம் வழிப்பறி : 8 பேரிடம் விசாரணை

ஆசிரியர் காரை மறித்து  ரூ7.5 லட்சம் வழிப்பறி : 8 பேரிடம் விசாரணை

தேனி:தேனி மின் அரசு நகர் ராமகிருஷ்ணன் 49. கம்பம் தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக உள்ளார். நேற்று காரில் அல்லிநகரத்தில் இருந்து மின் அரசு நகர் நோக்கி சென்றார். துணிப்பையில் ரூ.7.5 லட்சம் வைத்திருந்தார். உடன் வந்த நண்பர் திண்டுக்கல்-- குமுளி ரோடு போடி விலக்கு இறங்கிச் சென்றார். அங்கு நின்று கொண்டிருந்த ஒருவர் 'தன்னை பள்ளி அருகேஇறக்கி விடுமாறு' கேட்டார். அவரை ராமகிருஷ்ணன் காரில் ஏற்றிக்கொண்டார்.தனியார் பள்ளி அருகே மற்றொரு காரில் வந்த ஏழு பேர் கும்பல் ராமகிருஷ்ணன் காரை வழிமறித்தது. அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் ராமகிருஷ்ணனை தாக்கினர். காரில் வந்த நபர் பணப்பையைஎடுத்துக் கொண்டு அந்த கும்பலுடன் சேர்ந்து காரில் போடி நோக்கி தப்பி சென்றுவிட்டனர்.ராமகிருஷ்ணன் புகாரில், வீரபாண்டி,பழனிசெட்டிபட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். பின் போடி போலீசாருக்கு தகவல்அளித்து, அங்கு காரில் இருந்த 8 பேரை போலீசார் பிடித்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி