உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  மாவட்ட பேட்மிட்டன் போட்டி 80 அணிகள் பங்கேற்பு

 மாவட்ட பேட்மிட்டன் போட்டி 80 அணிகள் பங்கேற்பு

கம்பம்: கம்பத்தில் 13,15 வயதுக்குட்பட்ட மாணவ,மாணவிகளுக்கான ஒற்றையர், இரட்டையர் பேட்மிட்டன் போட்டிகள் நடைபெற்றது. கம்பம் ஆங்கூர்பாளையம் ரோட்டில் உள்ள எம்.கே.எம். பேட்மிட்டன் மைதானத்தில் மதுரை, தேனி மாவட்டங்களை சேர்ந்த பல்வேறு பள்ளி மாணவ மாணவிகள் பேட்மிட்டன் போட்டி நடந்தது. மகளிர் ஒற்றையர்,இரட்டையர், ஆண்கள் ஒற்றையர்,இரட்டையர் பிரிவுகளில் 80 அணிகள் பங்கு பெற்றன. இந்திய பேட்மிட்டன் அணி பயிற்சியாளர் யுவதயாளன் போட்டிகளை துவக்கி வைத்தார். இரட்டையர் பிரிவில் முதலிடம் பெற்றவர்களுக்கு ரூ.6 ஆயிரம்,இரண்டாம் இடம் பெற்றவர்களுக்கு ரூ.4 ஆயிரம் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. ஒற்றையர் பிரிவில் முதலிடம் பெற்றவர்களுக்கு ரூ.3 ஆயிரம், இரண்டாம் இடம் பெற்றவர்களுக்கு ரூ.2 ஆயிரம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் ஜெயபாண்டியன், பேர்லேண்ட் பள்ளி தாளாளர் தீப லட்சுமி, எம்.கே.எம் ஸ்போர்ட்ஸ் நிர்வாகிகள் செந்தூர், ஜெயபிரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை