உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  மறியலில் ஈடுபட்ட 852 பணியாளர்கள் கைது

 மறியலில் ஈடுபட்ட 852 பணியாளர்கள் கைது

தேனி: சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்களுக்கு குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ.6750 அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும், அரசுத்துறை காலிப்பணியிடங்களில் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்களுக்கு 5 சதவீத முன்னுரிமை அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே சத்துணவு, அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ரோடு மறியல் நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் சின்னசாமி, தேன்மொழி, அரசு ஊழியர் சங்க நிர்வாகி சென்னமராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மறியலில் ஈடுபட்ட 836 பெண்கள், 16 ஆண்கள் என மொத்தம் 852 பேரை போலீசார் கைது செய்தனர். அங்கன்வாடி பணியாளர் 800க்கும் மேற்பட்டோர் விடுமுறை எடுத்ததால் அங்கன்வாடி மையங்கள் ஓய்வு பெற்ற ஊழியர்கள், ஊராட்சி பணியாளர்கள் மூலம் செயல்படுத்தப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ