உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வீட்டில் பீரோவை உடைத்து ரூ.ஒரு லட்சம் நகை திருட்டு

வீட்டில் பீரோவை உடைத்து ரூ.ஒரு லட்சம் நகை திருட்டு

பெரியகுளம்: பெரியகுளம் கீழவடகரை ஸ்டேட் பாங்க் காலனியைச் சேர்ந்த முகமது கனி 68, இவரது மனைவி செல்லம்மாள் 65. இவர்களுக்கு இரு மகள்கள் உட்பட 3 பிள்ளைகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் நடந்து தனித்தனியாக வசித்து வருகின்றனர். இவர்களது வீட்டருகே குடியிருந்த மகள் ரம்ஜான். மருமகனுடன் சிங்கப்பூரில் வசித்து வருகிறார். கடந்தாண்டு ரம்ஜான் பெரியகுளம் வந்தார். 40 நாட்களுக்கு முன் சிங்கப்பூர் சென்றார். மகள் வீட்டு செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சி, செல்லம்மாள் தினமும் பராமரித்து வந்தார். இந்நிலையில் ரம்ஜான் வீட்டு, பூட்டு அறுக்கப்பட்டு, படுக்கையறை கதவு, உள்ளேயிருந்த பீரோவும் உடைக்கப்பட்டு அதில் இருந்த தங்க மோதிரம், தங்க தோடு, ஜிமிக்கி உட்பட ரூ.3 லட்சம் மதிப்பிலான ஆறரை தங்க நகைகள் திருடுபோனது. வடகரை எஸ்.ஐ.,தெய்வக்கண்ணன் விசாரிக்கின்றர்.--


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ