உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  வனப்பகுதியில் கழிவுகளை கொட்ட வந்தவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

 வனப்பகுதியில் கழிவுகளை கொட்ட வந்தவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

கம்பம்: கேரளாவில் இருந்து கம்பமெட்டு வனப்பகுதியில் காய்கறி கழிவுகளை கொட்ட வந்த வாகனத்தை சோதனை செய்து ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகளை தமிழக பகுதிக்குள் கொண்டு வந்து கொட்டி வந்தனர். ஐகோர்ட் தலையிட்டு உத்தரவு பிறப்பித்த பின் மருத்துவக் கழிவுகள் கொட்டுவது குறைந்தது. ஆனாலும் இன்னமும் இடுக்கி மாவட்டம், கட்டப்பனை, தொடுபுழா, மூவாற்றுப் புழா, வண்டிப் பெரியாறு, நெடுங்கண்டம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வழக்கமாக பல்வேறு வகையான கழிவுகள், குப்பையை வாகனங்களில் கொண்டு வந்து கம்பமெட்டு வனப்பகுதி, அடிவார காடுகளில் கொட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். சமீபத்தில் விவசாயி ஒருவரின் புகாரின் பேரில் மாசு கட்டுப்பாடு அதிகாரிகள் வந்து ஆய்வு செய்து, சோதனை சாவடிகளை எச்சரித்து சென்றனர். ஆனாலும் குப்பை கொட்டுவது தொடர்கிறது - நவ . 2 ல் கட்டப்பனையில் உள்ள ஸ்ரீராம் ரெக்சின் ஒர்க்ஸ் என்ற கடையில் சேகரமான ரெக்சின் கழிவுகளை தனது காரின் டிக்கியில் வைத்து சோலைராஜா 38 என்பவர் கம்பமெட்டு வனப்பகுதியில் கொட்ட வந்த போது , சோதனை சாவடியில் பிடித்துள்ளனர். சோலைராஜாவிற்கு வனத்துறையினர் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து அனுப்பி விட்டனர். மீண்டும் நேற்று முன்தினம் கட்டப்பனையை சேர்ந்த சன்னி தாமஸ் என்பவர் லாரியில் காய்கறி கழிவுகளை தமிழக பகுதிக்குள் கொட்ட வந்த போது பிடிபட்டார். வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் அவருக்கு வனத்துறை ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து திருப்பி அனுப்பினர். அபராதம் விதிப்பதை தவிர்த்து குற்றவியல் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே தடுக்க முடியும். அதோடு வாகனங்களையும் பறிமுதல் செய்ய வேண்டும். ஆனால் வனத்துறை, போலீஸ் அதிகாரிகள் இந்த விசயத்தில் மென்மையான போக்கை கடைப்பிடிப்பது ஏன் என தெரியவில்லை. கலெக்டர் ரஞ்ஜீத் சிங் இந்த விசயத்தில கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி