வாசகர்கள் கருத்துகள் ( 1 )
புரொடஸ்டர்
ஜூன் 19, 2025 08:04
நவீன "நண்பர்கள்"
மூணாறு:மூணாறு, உடுமலைபேட்டை ரோட்டில் பசுக்களுடன் படையப்பா நடமாடியதால் பரபரப்பு ஏற்பட்டது.மூணாறு பகுதியில் வலம் வரும் பிரபல படையப்பா ஆண் காட்டு யானை தனக்கென தனி வழியில் நடமாடுவது வழக்கம். அதன்படி மூணாறு, உடுமலைபேட்டை ரோட்டில் பாம்பன்மலை பகுதி வரை செல்வதுண்டு. கடந்த சில நாட்களாக வாகுவாரை உள்பட பல பகுதிகளில் நடமாடியது.இந்நிலையில் மூணாறு, உடுமலைபேட்டை ரோட்டில் சட்ட மூணாறு அருகே காப்பி ஸ்டோர் பகுதியில் நேற்று பகலில் பசுக்களுடன் படையப்பா ரோட்டில் நடமாடியது. அதனால் பரபரப்பு ஏற்பட்டதுடன் வாகனங்கள் கடந்து செல்ல இயலாமல் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நவீன "நண்பர்கள்"