உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மின் தடை  அவசர உதவிக்கு  அழைக்கலாம்

மின் தடை  அவசர உதவிக்கு  அழைக்கலாம்

தேனி : தேனி மின்கோட்ட மேற்பார்வை பொறியாளர் லட்சுமி அறிக்கையில் கூறியதாவது: இன்று முதல் ஜன.19 வரை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொது மக்கள் நலன் கருதி மின்செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள், உதவிப் பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள் தங்களது பகுதிக்கு உட்பட்ட துணை மின் நிலையங்கள், மின் வினியோகப் பாதைகளை தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டும். இயற்கை இடர்பாடுகளால் மின்தடை ஏற்பட்டால் போர்க்கால அடிப்படையில் சீரமைத்து, சீரான மின் வினியோகம் வழங்குவதை உறுதி செய்திட வேண்டும். பொது மக்கள் மின்சாரம் குறித்த அவசர உதவி தேவைப்பட்டால் மின்நுகர்வோர் சேவை மையத்தின் அலைபேசி எண் 94987 94987க்கு தொடர்பு கொள்ளலாம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை