உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / அணையாத தெருவிளக்கு

அணையாத தெருவிளக்கு

தேனி : பெரியகுளம் அருகே தென்கரை பேரூராட்சிக்கு உட்பட்ட பாரதி நகர் சிறுவர் பூங்காவை ஒட்டி இரு தெருவிளக்குகள் பத்து நாட்களுக்கு முன் பேரூராட்சி நிர்வாகம் அமைத்தது. இத் தெருவிளக்கு அமைத்தது முதல் இரவு பகலாக எரிகிறது. தெருவிளக்கு அமைத்த பேரூராட்சி பணியாளர்கள் மெயின் மின் லைனில் தெரு விளக்கிற்கு மின் இணைப்பு கொடுத்துள்ளதால் மற்ற தெருவிளக்குகள் அணைந்தாலும் சிறுவர் பூங்காவை ஓட்டிய தெருவிளக்குகள் அணையாத விளக்கு போல் எரிந்து மின்சாரம் விரையம் ஆகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி