கூலித் தொழிலாளியை தாக்கியவருக்கு ஓராண்டு சிறை
தேனி: சின்னமனுார் அய்யம்பட்டி கிழக்குத்தெரு கூலித்தொழிலாளி சுரேஷ் 36. இவர் 2018 டிச.19ல் அங்குள்ள பரோட்டா கடைக்கு சென்றார். ஓட்டல் அருகில் தங்கப்பாண்டி, திருச்செல்வம் 37, இருந்தனர். அதில் திருச்செல்வம், சுரேஷிடம், எங்கு வேலை செய்கிறாய்' எனக்கேட்டுள்ளார். கேரளாவில் வேலை செய்கிறேன் என கூறிய சுரேஷ்யை ஜாதியை கூறி திட்டி, செருப்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். சுரேஷ் புகாரில் சின்னமனுார் போலீசார் திருச்செல்வத்தை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்தனர். இந்த வழக்கு எஸ்.சி.எஸ்.டி., வன்கொடுமை வழக்குகளை விசாரிக்கும் மாவட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கறிஞர் இசக்கிமுத்து ஆஜரானார். குற்றவாளி திருச்செல்வத்திற்கு ஓராண்டு சிறை, ரூ. 3 ஆயிரம் அபராதம், கட்டத்தவறினால் மேலும் ஒரு மாதம் சிறை தண்டனை விதித்து நீதிபதி அனுராதா தீர்ப்பளித்தார்.