உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கூடலூர் -சுருளி அருவி ரோட்டில் விபத்து அபாயம்

கூடலூர் -சுருளி அருவி ரோட்டில் விபத்து அபாயம்

கூடலுார்: கூடலுார் -சுருளி அருவி ரோட்டில் கான்கிரீட் மேடு அமைக்கப்பட்டதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. கூடலூரில் இருந்து கருநாக்கமுத்தன்பட்டி வழியாக சுருளி அருவிக்கு செல்லும் 9 கி.மீ., தூர ரோடு மாநில நெடுஞ்சாலை துறைக்கு கட்டப்பட்டதாகும். கேரளாவில் இருந்து சுருளி அருவிக்கு செல்ல துாரம் குறைவு காரணமாக சுற்றுலாப் பயணிகள் இவ்வழியை அதிகம் பயன்படுத்துகின்றனர். அதே போல் பல்வேறு பகுதிகளில் இருந்து சுருளி அருவிக்குச் சென்ற சுற்றுலாப் பயணிகள் கேரளா செல்லும்போது இவ்வழியாக வருவார்கள். மேலும் விளைநிலங்களுக்கு விவசாயிகளின் வாகனங்களும் அதிகமாக செல்லும். முக்கியத்துவம் வாய்ந்த இந்த ரோட்டில் வாகன போக்குவரத்து அதிகம். கூடலுாரில் துவங்கும் பகுதியில் ரோட்டை ஒட்டி கழிவு நீரோடை மீது அமைக்கப்பட்ட நடைபாதையை இணைப்பதற்காக கான்கிரீட் மேடு அமைக்கப்பட்டுள்ளது. ரோட்டின் பாதிவரை மேடு இருப்பதால் இவ்வழியாக வரும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. முன்கூட்டியே நெடுஞ்சாலை துறையினர் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ