உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மின்விளக்கின்றி பாலத்தில் தொடரும் விபத்து

மின்விளக்கின்றி பாலத்தில் தொடரும் விபத்து

தேனி: தேனி அருகே அம்மச்சியாபுரம்- - அய்யனார்புரம் பாலத்தில் மின்விளக்குகள் எரியாததால் இரவில் விபத்துக்கள் தொடர்கிறது. தேனி ஒன்றியம் அரண்மனைப்புதுார் ஊராட்சி அய்யனார்புரம், ஆண்டிபட்டி ஒன்றியம் அம்மச்சியாபுரம் இந்த இரு கிராமங்களும் மூல வைகை ஆற்றின் எதிர் எதிர் கரைகளில் அமைந்துள்ளன. இரு கிராமங்களையும் இணைக்கும் வகையில் பாலம் அமைக்கப் பட்டுள்ளது. இந்த பாலத்தில் இருபுறமும் மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. ஒரு புறமுள்ள விளக்கு களுக்கு அம்மச்சியாபுரம் ஊராட்சியில் இருந்து மின் இணைப்பும், மற்றொரு புறம் உள்ள விளக்குகளுக்கு அய்யனார்புரம் கிராமத்தில் இருந்தும் மின் இணைப்பு வழங்கப் பட்டுள்ளது. பாலத்தில் பொருத்தப்பட்டுள்ள சில மின் விளக்குகள் பழுதாகியும், சிலவற்றை சமூக விரோதிகள் சேதப்படுத்தி உள்ளனர். இதனால் இரவில் பாலம் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இரவில் விபத்துக்களும் நடக்கிறது. மின் விளக்குகள் பளிச்சிட ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை