உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / குலதெய்வம் கோவிலில் நடிகர் தனுஷ் சுவாமி தரிசனம்

குலதெய்வம் கோவிலில் நடிகர் தனுஷ் சுவாமி தரிசனம்

போடி:போடி அருகே கருப்பசுவாமி கோவிலில், நடிகர் தனுஷ் சாமி தரிசனம் செய்தார். நடிகர் தனுஷ் இயக்கி நடித்த, இட்லி கடை என்ற படம், தியேட்டர்களில் திரையிடப் படுகிறது. இந்த வெற்றியை கொண்டாடவும், நேர்த்திக்கடனை செலுத்தவும், தேனி மாவட்டம், போடி அருகே சங்கராபுரத்தில் தன் தாயின் குலதெய்வம் கருப்பசுவாமி கோவிலில், நடிகர் தனுஷ், குடும்பத்தினருடன் தரிசனம் செய்தார். மேலும், கிடா வெட்டி பொது மக்களுக்கு விருந்தும் அளித்தார். இதில், அவரின் தந்தையும் இயக்குநருமான கஸ்துாரிராஜா, தாய் விஜயலட்சுமி, மகன்கள் யாத்ரா, லிங்கா, அண்ணன் இயக்குநர் செல்வராகவன் ஆகியோருடன் கலந்து கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ