| ADDED : நவ 02, 2025 06:02 AM
தேனி: மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளி மாணவர்களுக்கு களப்பயணம் திட்டத்தில் கல்லுாரி சென்றனர். அங்குஉயர்கல்வி தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் நான் முதல்வன் திட்டத்தில் அரசுப்பள்ளிகளில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் உயர்கல்வி செல்வதை உறுதி செய்ய மாவட்டத்தில் உள்ள அரசு கல்லுாரிகளுக்கு அழைத்து செல்லப்படுகின்றனர். முதற்கட்டமாக 2470 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் போடி அரசு பொறியியல் கல்லுாரி, அரசு மருத்துவக்கல்லுாரி, அரசு நர்சிங் கல்லுாரி, அரசு சட்டக்கல்லுாரி, அரசு தோட்டக்கலை கல்லுாரிகளுக்கு இதுவரை சுமார் ஆயிரம் மாணவர்கள் அழைத்து செல்லப்பட்டுள்ளனர். அங்குள்ள ஆய்வகங்கள், நுாலகங்களுக்கு அழைத்து செல்லப்பட்டு செயல் விளக்கம் அளிக்கப்படு கிறது. மாலையில் பேராசிரியர்கள் கல்லுாரி பாடத்திட்டங்கள், வேலைவாய்ப்பு உள்ளிட்டவை பற்றி மாணவர்களிடம் கலந்துரையாடுகின்றனர். மாவட்டத்தில் இருந்து 192 அரசுப்பள்ளி மாணவர்கள் காந்திகிராமம் பல் கலைக்கு களப்பயணம் திட்டத்தில் அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கல்வித்துறையினர் தெரிவித்த னர்.