உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மானிய விலையில் விதைகள் பயன் பெற ஆலோசனை

மானிய விலையில் விதைகள் பயன் பெற ஆலோசனை

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி வேளாண் அலுவலகத்தில் விவசாயிகளுக்கு 50 சத மானிய விலையில் வழங்கப்படும் விதைகள், உயிர் உரங்கள், நுண்ணூட்ட கலவை ஆகியவற்றை விவசாயிகள் வாங்கி பயன்பெறுமாறு ஆண்டிபட்டி வேளாண் உதவி இயக்குனர் கண்ணன் தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்திருப்பதாவது:சிறு தானிய இயக்கம், முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம், மாநில வேளாண்மை வளர்ச்சி திட்டம், பருத்தி இயக்கம், விதை கிராமத் திட்டம் மூலம் விவசாயிகளுக்கு நெல், மக்காச்சோளம், சோளம், கம்பு, குதிரைவாலி, ராகி, உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம் ரைசோபியம், பாஸ்போ பாக்டர், பொட்டாஷ் நுண்ணுரம், ஜிங்க் நுண்ணுரம், ஜிங்க் சல்பேட், மற்றும் நுண்ணூட்ட கலவையுடன் பாரம்பரிய நெல் ரகங்களான சீரகச் சம்பா, நவரா, சிறு தானியங்கள், பயறு வகைகள், பருத்தி, தளவாட கருவிகளில் பேட்டரி தெளிப்பான், ரோட்டாவேட்டர் ஆகியவை போதுமான அளவு இருப்பில் உள்ளன. 50 சதவீத மானிய விலையில் வழங்கப்படும் விவசாயிகளுக்கான பொருட்களை, விவசாயிகள் தங்கள் நிலங்களுக்கான பட்டா, சிட்டா அடங்கல் ஆகியவற்றை சமர்ப்பித்து வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் பெற்று பயன்பெறலாம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ