உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பாரம்பரிய பயிர் ரகங்கள் சாகுபடி; வேளாண் துறை விழிப்புணர்வு

பாரம்பரிய பயிர் ரகங்கள் சாகுபடி; வேளாண் துறை விழிப்புணர்வு

கம்பம்; பாரம்பரிய உள்ளூர் பயிர் ரகங்களை விவசாயிகள் மத்தியில் பிரபலபடுத்தி, அதிக பரப்பில் சாகுபடி செய்ய வேளாண் துறை விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொண்டுள்ளனர்.வீரிய ஒட்டு ரகங்களான காய்கறிகள், பழ வகைகள், அரிசி, சோளம், கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட அனைத்து உணவு வகைகளிலும் கார்ப்பரேட் கம்பெனிகள் விதைகளை அறிமுகம் செய்கிறது. இதனால் மண் வளம் பாதிக்கப்படுவதுடன் விளைச்சல் திறன் குறைவது, புதுப்புது நோய்கள் உருவாகி அதனை கட்டுப்படுத்துவது சவாலாக உள்ளது. மண்ணின் வளம், மனித குல ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு, இயற்கை வேளாண் நடைமுறைகளை பின்பற்ற வேளாண் துறை ஊக்குவிக்க துவங்கி உள்ளது.அதை பிரபலப்படுத்தும் நடவடிக்கைகள் வேளாண் துறை மேற்கொண்டுள்ளது. இதற்கென மாவட்டந்தோறும் ஆண்டிற்கு மூன்று முறை கண்காட்சிகளை நடத்தவும் திட்டமிட்டுள்ளது. கண்காட்சி விழிப்புணர்வு பிரசாரத்தில் வேளாண்,தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை, பட்டு வளர்ச்சி துறை, விதை சான்றளிப்பு துறை, மார்க்கெட்டிங் உள்ளிட்ட துறைகள் பயிர்களை காட்சி படுத்தியும் பிரசாரம் செய்ய உள்ளனர். இதற்கென ஒவ்வொரு வட்டாரத்திலும் ஒரு உதவி வேளாண் அலுவலர் தலைமையில் ஆர்வம் உள்ள முன்னோடி விவசாயிகளை உள்ளடக்கிய குழுக்கள் ஏற்படுத்தப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ