உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / அரசு வேலை வாங்கித் தருவதாக நால்வரிடம் ரூ.20.50 லட்சம் மோசடி வேளாண் அலுவலக எழுத்தர் கைது

அரசு வேலை வாங்கித் தருவதாக நால்வரிடம் ரூ.20.50 லட்சம் மோசடி வேளாண் அலுவலக எழுத்தர் கைது

தேனி:மதுரை வாடிபட்டி தாலுகா எல்.புதுாரை சேர்ந்தவர்ராஜன் 57. சமயநல்லுார் டீக்கடை கேஷியர். இவரது சகலை கண்ணன், மேல்மங்கலம் கூட்டுறவு கடன் சங்கத்தின் எழுத்தர். 2022 செப்.,ல் இவர்களுக்கு தேனி வேளாண் அலுவலகத்தில் எழுத்தராக பணிபுரியும் கருப்பசாமி அறிமுகமானார். அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகளை தெரியும். பலருக்கு அரசு வேலை வாங்கி கொடுத்துள்ளேன் என கருப்பசாமி கூறியுள்ளார். இதனை நம்பிய ராஜன், தனது மகன் காளீஸ்வரனுக்கும், கண்ணனின் மகன் விஷ்ணுவர்த்தனுக்கும் வேலை வாங்கித் தருவதற்காக ரூ.8.50 லட்சமும், கண்ணன் மகள்கமலிக்கு வேலை வாங்கித் தர ரூ.4.50 லட்சமும், கண்ணன் அலுவலகத்தில் தற்காலிகமாகபணிபுரியும் பிரேமா என்பவருக்கு நிரந்தர பணி வாங்கித் தர ரூ.7.50 லட்சமும் சேர்த்து மொத்தம் ரூ.20.50 லட்சத்தை கருப்பசாமியிடம் வழங்கினர். ஆனால் யாருக்கும் வேலை வாங்கித்தரவில்லை. இதையடுத்து ராஜன் புகாரில் கருப்பசாமி மீது தேனி மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மாயாராஜலட்சுமி வழக்குப் பதிந்தார். எஸ்.ஐ., யாழிசைசெல்வன் தலைமையிலான போலீசார் வேளாண் அலுவலகத்தில் வைத்து கருப்பசாமியை நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை