உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மீண்டும் டிஜிட்டல் கிராப் சர்வே வேளாண் அலுவலர்கள் புலம்பல்

மீண்டும் டிஜிட்டல் கிராப் சர்வே வேளாண் அலுவலர்கள் புலம்பல்

கம்பம்: மீண்டும் 'டிஜிட்டல் கிராப் சர்வே' பணிகளை ஏப். 24 முதல் மே 15 வரையிலும், விவசாயிகளின் விபரங்களை பதிவு செய்யும் பணிகளும் வாட்டி வதைத்து வருவதாக வேளாண் துறையினர் விரக்தியுடன் புலம்பி வருகின்றனர்.விவசாயிகளின் விபரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும் பணிகள் ஓராண்டாக நடந்து வருகிறது. அனைத்து வட்டாரங்களிலும் 80 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளது. பணி முடித்து ரிலாக்ஸ் ஆகலாம் என்ற நிலையில் மீண்டும் டிஜிட்டல் கிராப் சர்வே செய்ய வேளாண் இயக்குநரகம் கடந்த வாரம் உத்தரவிட்டுள்ளது.வேளாண் சாகுபடி பருவம் ராபி மற்றும் காரிப் என அழைக்கப்படுகிறது. தற்போது காரிப் பருவத்தில் நிலங்களில் என்ன பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது என்பதை நேரில் பார்த்து அடங்கலில் பதிவேற்றம் செய்ய அனைத்து மாவட்ட வேளாண் இணை இயக்குநர்களுக்கு வேளாண் இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.நேற்று ( ஏப். 24 முதல் மே 15 வரை ) 21 நாட்கள் இந்த பணியை மேற்கொள்ளவும், இந்த பணியில் இல்லம் தேடி கல்வி பணியாளர்கள், மகளிர் சுயஉதவி குழுவினர், தன்னார்வலர்களை ஈடுபடுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக மகளிர் மேம்பாடு மாவட்ட திட்ட இயக்குநர்களுக்கும் , இல்லம் தேடி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கும் தகவல் தரப்பட்டுள்ளதாகவும், வேளாண் இணை இயக்குநர்கள் அவர்களுடன் ஆலோசனை செய்து, பணியை துவக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இது தொடர்பாக வேளாண் துறையினர் கூறுகையில் , வெயிலின் தாக்கம் அதிகம் உள்ள நிலையில் கிராப் சர்வே செய்ய ஒவ்வொரு நிலத்திற்கும் நேரடியாக சென்று போட்டோ பதிவேற்றம் செய்ய வேண்டும். அலுவலர்கள் பலருக்கு சர்க்கரை, ரத்த அழுத்த நோய்கள் உள்ளது. எவ்வாறு இந்த பணிகளை மேற்கொள்வது என தெரியாமல் புலம்பி வருகின்றனர். இதனால் வழக்கமான அலுவலக பணிகள், விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்குவது உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டு வருவதாகவும் கூறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை