அ.தி.மு.க., பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆய்வுக்கூட்டம்
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் அ.தி.மு.க., பூத் கமிட்டி தேர்வு செய்யப்பட்டு, அதற்கான நிர்வாகிகளும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அ.தி.மு.க., மேலிட நிர்வாகிகள் பூத் வாரியாக சென்று பூத் கமிட்டியில் பதிவு செய்துள்ளவர்கள், அவர்களுக்கான அடையாள அட்டைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். ஆண்டிபட்டி ஒன்றியம் டி.பொம்மிநாயக்கன்பட்டி, டி.சுப்புலாபுரம் கிராமங்களில் மாவட்ட செயலாளர் ராமர், தொகுதி பொறுப்பாளர் ரதிமீனா ஆகியோர் முன்னிலையில் ஒன்றிய செயலாளர்கள் லோகிராஜன், வரதராஜன் ஆகியோர் பூத் கமிட்டி குறித்தும் நியமன படிவங்களில் இருந்த விபரங்களையும் ஆய்வு செய்தனர். மாநில ஜெ.,பேரவை இணை செயலாளர் ஜெயக்குமார், ஆண்டிபட்டி நகர் செயலாளர் அருண்மதி கணேசன், ஒன்றிய அவைத் தலைவர் மதி, ஒன்றிய பொருளாளர்கள் லோகநாதன், செல்வம், தகவல் தொடர்பு அணி ஒன்றிய செயலாளர் ராஜபாண்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=zf4og1po&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0