உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பி.எல்.ஓ.,க்கள் மட்டுமே படிவங்களை திரும்ப பெற கோரி அ.தி.மு.க., மனு

பி.எல்.ஓ.,க்கள் மட்டுமே படிவங்களை திரும்ப பெற கோரி அ.தி.மு.க., மனு

தேனி: தேனி கிழக்கு அ.தி.மு.க., மாவட்டச் செயலாளர் ராமர் தலைமையிலான கட்சி நிர்வாகிகள் கலெக்டர் ரஞ்ஜீத்சிங்கிடம் கோரிக்கை மனு அளித்தனர்.அதில் கூறியிருப்பதாவது: தேர்தல் ஆணையத்தால் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல்திருத்தப் பணிகள் நடந்து வருகின்றன. ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று படிவங்கள்வழங்கும் பணி நடந்து வருகிறது. பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை அரசியல் கட்சிகளின் ஓட்டுச்சாவடி முகவர்கள் மூலமாக அதிகபட்சம் 50 படிவங்கள் பெற்று வந்து வழங்கலாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் அரசியல் கட்சிகளின் ஓட்டுச்சாவடி நிலை முகவர்கள் மூலம் பெற்றால் முறைகேடுகள் நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே,வீடுவீடாக சென்று வழங்கப்படும் வாக்காளர் பூர்த்தி செய்த படிவங்கள், ஓட்டுச்சாவடி அலுவலர்களால் மட்டுமே பெறவேண்டும். இதுகுறித்து கலெக்டர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரினர். உடன் தேனி கிழக்கு மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளர் ரதிமீனாசேகர், தேனி அ.தி.மு.க., நகரச் செயலாளர் கிருஷ்ணக்குமார், மாநில ஜெ., பேரவை இணைச் செயலாளர் ஜெயக்குமார், மாவட்ட வழக்கறிஞர் பிரிவுத் தலைவர் ஜெயராமன், பெரியகுளம் மேற்கு ஒன்றியசெயலாளர் அன்னப்பிரகாஷ் உடனி ருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ