| ADDED : நவ 16, 2025 04:25 AM
போடி: போடியில் அ.தி.மு.க., சார்பில் ஓட்டுச் சாவடி முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. தேனி மேற்கு மாவட்ட செயலாளர் ஜக்கையன் தலைமை வகித்தார். துணை செயலாளர் சற்குணம், கொள்கை பரப்பு துணை செயலாளர் பாப்புலர் முத்தையா, போடி நகர செயலாளர்கள் வாசு, மாரியப்பன், ஒன்றிய செயலாளர்கள் பாண்டித்துரை, பாலசுப்பிரமணி, முத்துப்பாண்டி, தேனி கிழக்கு ஒன்றிய செயலாளர் நாராயணசாமி, மேற்கு மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் ஜெயச்சந்திரன் முன்னிலை வகித்தனர். மதுரை புறநகர் மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சிங்கராஜ பாண்டியன், இணைச் செயலாளர் ஆனந்த் ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கான ஆலோசனைகளை வழங்கினர். இதில் அரசின் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு, வீடாக வழங்கும் படிவங்கள் வாக்காளர்களிடம் முறையாக கொண்டு சேர்க்கப்படுகிறதா என்பது குறித்தும், பூர்த்தி செய்த படிவங்களை மீண்டும் கொண்டு சேர்க்க வேண்டும். வாக்காளர் பட்டியலில் தகுதியான ஓட்டுகளை சேர்த்தல், வெளியூரில் வசிப்பவர், இறந்தவர்களின் பெயரை நீக்குதல், கட்சியினரின் ஓட்டுகள் சரியாக உள்ளதா போன்ற விவரங்களை அ.தி.மு.க., ஓட்டுச்சாவடி முகவர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தப் பட்டன.