எய்ட்ஸ் விழிப்புணர்வு
தேனி:தேனி நாடார் சரஸ்வதி கல்வியியல் கல்லுாரியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு, வாழ்வியல் திறன் பயிற்சி என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை தலைவர் தர்மராஜன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் ஜீவகன், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தனர். கல்லுாரி செயலாளர் பிரபு ரத்தினம், இணைச்செயலாளர் சுப்புராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு, கட்டுப்பாட்டு பிரிவு திட்ட மேலாளர் முகமது பாருக் தலைமையிலான குழுவினர் எச்.ஐ.வி., தொற்று பரவில், தீர்ப்பதற்கான வழிமுறைகள் உள்ளிட்டவை பற்றி பேசினர்.