உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஏ.ஐ.டி.யு.சி., ஆர்ப்பாட்டம்

ஏ.ஐ.டி.யு.சி., ஆர்ப்பாட்டம்

தேனி: விழுப்புரத்தில் மழை வெள்ளத்தில் உயிரிழந்த டாஸ்மாக் விற்பனையாளர் சக்திவேல் வாரிசுக்கு அரசு பணி வழங்க வேண்டும். நிவாரணம் ரூ.50 லட்சம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கருவேல்நாயக்கன்பட்டி டாஸ்மாக் கோடவுன் முன் தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம் தேனி மாவட்டக் குழு (ஏ.ஐ.டி.யு.சி.,) சார்பில் கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டச் செயலாளர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார்.மாவட்டத் தலைவர் மாரிமுத்து முன்னிலை வகித்தார். ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட பொதுச் செயலாளர் ராஜ்குமார், மாவட்ட பொருளாளர் சென்றாய பெருமாள், மாவட்டச் செயலாளர்கள் ஞானவேல், உதயசூரியன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ