முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
தேனி: வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளி 14 ஆண்டுகளுக்கு முன் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் சீனிவாசன் தலைமை வகித்தார். பள்ளி ஆசிரியர்கள் மருதுபாண்டியன், மகேந்திரன், பயிற்றுநர் பிரியதர்ஷினி முன்னிலை வகித்தனர். முன்னாள் மாணவர்கள் தங்கள் பள்ளிகால அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். விழாவில் பங்கேற்றவர்களுக்கு நினைவுப்பரிசுகளை பள்ளி தலைமை ஆசிரியர் முன்னாள் மாணவர்களுக்கு வழங்கினார்.