உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / முன்னாள் மாணவிகள் சந்திப்பு

முன்னாள் மாணவிகள் சந்திப்பு

பெரியகுளம்: பெரியகுளம் அருகே கைலாசபட்டி திரவியம் மகளிர் கல்லூரியில் நிறுவனர் தினவிழா மற்றும் முன்னாள் மாணவிகள் சந்திப்பு விழா நடந்தது. கவிஞர் வாக்கிங் தலைமை வகித்தார். கல்லூரி தாளாளர் டாக்டர் பாண்டியராஜ், செயலாளர் டாக்டர் ஹேமலதா, இயக்குனர் டாக்டர் இமானுவேல் ஜூடோ முன்னிலை வகித்தனர். பேராசிரியை முத்துலட்சுமி வரவேற்றார். நிறுவனர் திரவியம் படம் திறந்து மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. 2012 முதல் 2025 ம் ஆண்டு படித்த மாணவிகள் சந்திப்பு நடந்தது. சமூக ஆர்வலர் நடிகர் பாலா பேசுகையில, ' மாணவிகள் படிப்பில் கவனம் செலுத்தினால், வேலை வாய்ப்புகள் உங்களை தேடிவரும்,' என்றார். வழக்கறிஞர் நிஷாந்த், சமூக ஆர்வலர் விக்கி சிவா, முதன்மை செயல் அலுவலர் அக்சிலியா ஆன்டனி, முதல்வர்கள் ஆனந்தபாபு, கவிதா, பட்டம்மாள் மற்றும் மாணவிகள் பங்கேற்றனர்.--


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை