மேலும் செய்திகள்
நிதி ஆலோசனை கூட்டம்
19-Dec-2025
தேனி: தேனி கம்மவார் சங்கம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. ஆங்கிலத்துறை உதவிப்பேராசிரியைராகநந்தினி வரவேற்றார். தேனி கம்மவார் சங்கத் தலைவர் நம்பெருமாள்சாமி தலைமை வகித்தார். கல்லூரியின் செயலாளர் தாமோதரன்,பொருளாளர் வாசுதேவன், சங்க பொதுச் செயலாளர் மகேஷ், கல்லுாரி முதல்வர் வெற்றிவேல் பேசினர். முன்னாள் மாணவர்கள் தங்கள் அனுபவங்கள், நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். முன்னாள் மாணவர்கள் குழு புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர். கணினி, தொழிற் நுட்பத் துறைத் தலைவர் கோட்டைச்சாமி, உதவிப்பேராசிரியர்கள் பிரபுகுமார், மைதிலி, கலைச்செல்வி, உடற்கல்வித் துறைத் தலைவர் சிவக்குமார் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.
19-Dec-2025