மாவட்டத்தில் அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிப்பு
பெரியகுளம்: பெரியகுளத்தில் அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது . இங்குள்ள பழைய பஸ் ஸ்டாண்ட் முன்பு உள்ள அம்பேத்கர் சிலைக்கு தி.மு.க., நகர செயலாளர் முகமது இலியாஸ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. சரவணக்குமார் எம்.எல்.ஏ., தென்கரை பேரூராட்சி தலைவர் நாகராஜ் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.வி.சி., கட்சி சார்பில் தாமரைக்குளம் கல்லூரி விலக்கிலிருந்து ஊர்வலம் துவங்கி, அம்பேத்கர் சிலை அருகே முடிந்தது. தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் ரபீக் தலைமை வகித்தார்.ஒன்றிய செயலாளர் ஆண்டி, துணை செயலாளர் ஆண்டவர், நகர செயலாளர் ஜோதி முருகன், சட்டசபை தொகுதி செயலாளர் சுசிதமிழ்பாண்டியன், தமிழ்வாணன், நாகரத்தினம் உட்பட பலர் பங்கேற்று அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.அம்பேத்கர் மக்கள் இயக்கம் சார்பில் மாவட்ட செயலாளர் சிவா, மாலை அணிவித்தார். மாவட்ட தலைவர் மாசாணம் பங்கேற்றனர்.தேனி: அல்லிநகரம் 'தேசிய தலைவர் அண்ணல் அம்பேத்கர் மக்கள் பேரவை'யின் சார்பில் அம்பேத்கரின் 68 வது நினைவு நாளையொட்டி அரண்மனைப்புதுாரில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். நிகழ்ச்சிக்கு பேரவையின் தலைவர் ராசய்யா தலைமை வகித்தார். துணைத் தலைவர் காளிதாஸ், செயலாளர் செந்தில், துணைச் செயலாளர் சுரேஷ்குமார், இணியவன், முத்துராமன், ஆலோசகர் லட்சுமணன், பொருளாளர் செல்வக்குமார், துணைப் பொருளாளர் குணபாலன் உள்பட பலர் பங்கேற்றனர்.