மேலும் செய்திகள்
சிறுபாலத்தில் பள்ளம் காத்திருக்கு ஆபத்து
14-Jun-2025
மூணாறு: மூணாறு நகரில் தபால் அலுவலகம் அருகில் உள்ள பழமையான இரும்பு பாலம் பராமரிப்பு இன்றி பலம் இழந்து வருகிறது.மூணாறு நகரில் தபால் அலுவலகம் அருகில் ஆங்கிலேயர் காலத்தில் ராணுவனத்தினர் அமைக்கும் 'பெய்லி' மாதிரியில் இரும்பு பாலம் அமைக்கப்பட்டது. அந்த பாலம் மூணாறில் இருந்து தமிழகத்தில் தேனி, மதுரை, திருநெல்வேலி உள்பட தென் மாவட்டங்களுக்கும், டாப் ஸ்டேஷன், வட்டவடை உள்பட பல்வேறு எஸ்டேட் பகுதிகளுக்கும் செல்ல முக்கியமானதாக உள்ளது.இந்நிலையில் இரும்புகள் துருபிடித்து பாலம் பலம் இழக்கும் நிலை ஏற்பட்டதால், அதன் அருகில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு கான்கிரீட் பாலம் கட்டப்பட்டு, இரும்பு பாலம் ஒரு வழி பாதையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.கடந்தாண்டு பாலத்தில் ஏற்பட்ட சிறிய பள்ளம் சரி செய்யாததால் தற்போது பெரிய பள்ளமாக மாறி வாகனங்கள் சிரமத்துடன் கடந்து செல்கின்றன. தவிர பாலம் பலம் இழந்து வருவதால் பஸ், லாரி உட்பட கனரக வாகனங்கள் கடந்து செல்லும்போது பாலம் ஆட்டம் காணுகிறது.மூணாறில் பழங்காலத்தை நினைவு கூறும் வகையிலான பல்வேறு அடையாளங்கள் காணாமல் போன நிலையில் பழமையான பாலத்தை பராமரித்து பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
14-Jun-2025