மாநில கிக்பாக்சிங் போட்டியில் ஆண்டிபட்டி மாணவிகள் சாதனை
ஆண்டிபட்டி: மாநில அளவில் பெண்களுக்கான கேலோ இந்தியா கிக் பாக்ஸிங் போட்டியில் தமிழ்நாடு அமச்சூர் கிக் பாக்சிங் அசோசியேசன் சார்பில் பங்கேற்ற ஆண்டிபட்டியை சேர்ந்த 7 மாணவிகள் தங்கப்பதக்கம் பெற்றுள்ளனர். திருச்சி அண்ணா உள் விளையாட்டு அரங்கில் நடந்த இப்போட்டியில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், வேலூர், தேனி மாவட்டங்களை சேர்ந்த 232 மாணவிகள் பங்கேற்றனர். தமிழ்நாடு அமச்சூர் கிக் பாக்சிங் அசோசியேசன் சார்பில் பலர் பங்கேற்றனர். சப் ஜூனியர் பிரிவில் ஆண்டிபட்டி பகுதியைச் சேர்ந்த யாழினி 10, இந்துஜா 10, சம்சிதா 12, ஜூனியர் பிரிவில் ரிகாஸ்ரீ 13, கிருபாஸ்ரீ 14, வசுமதி 14, சீனியர் பிரிவில் சம்யுக்தா 16, ஆகியோர் தங்கப்பதக்கம் பெற்றுள்ளனர். கன்னியப்பபிள்ளைபட்டி பயிற்சி மையத்தில் நடந்த பாராட்டு விழாவில் பதக்கம் பெற்ற மாணவிகளை கிக் பாக்ஸிங் அசோசியேசன் தலைவர் மகாராஜன், செயலாளார் துரைமுருகன், துணை பயிற்சியாளர்கள் ஜெயவேல் சபரீஷ், சச்சின் ஆகியோர் பாராட்டினர்.